sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'சம்பா' பருவத்தில் அதிக மகசூல் நெற்பயிருக்கு சமச்சீர் உரமிட அறிவுரை

/

'சம்பா' பருவத்தில் அதிக மகசூல் நெற்பயிருக்கு சமச்சீர் உரமிட அறிவுரை

'சம்பா' பருவத்தில் அதிக மகசூல் நெற்பயிருக்கு சமச்சீர் உரமிட அறிவுரை

'சம்பா' பருவத்தில் அதிக மகசூல் நெற்பயிருக்கு சமச்சீர் உரமிட அறிவுரை


ADDED : நவ 03, 2024 02:40 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில், 40,000 ஏக்கரில் நெல் நடவு பணி நடந்து வருகிறது. ஆனால் அதிகமான, தரமான மகசூல் கிடைக்க, சமச்சீர் உரமிடல் அவசியம் என அறிவுறுத்தப்-பட்டுள்ளது.

இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது:இயற்கை உரங்கள், செயற்கை உரங்கள், உயிர் உரங்கள், நுண்-ணுாட்ட சத்துகள் ஆகியவற்றை சேர்த்து நெற்பயிருக்கு அளிப்-பது சமச்சீர் உரம்.

இயற்கை உரங்கள்: வயலில் சணப்பை, தக்கைப்பூண்டு பயி-ரிட்டு, 40, -45 நாட்களில் மடக்கி, மண்ணில் உழுவதால் கரிம சத்-துகளின் அளவு அதிகரித்து பயிருக்கு வேண்டிய தழைச்சத்து கிடைக்கிறது.

கதிரில் நெல் மணிகள் அதிகரிக்க, மணிகள் நன்றாக முற்ற, தழைச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. பயிர் நட்ட, 3-5 நாட்க-ளுக்குள் ஏக்கருக்கு, 100 கிலோ அசோலா இட்டு, மண்ணில் மிதித்து மட்கச்செய்ய வேண்டும்.

இதனால் காற்றிலுள்ள தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்-பட்டு நெற்பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

நெற்பயிருக்கு அடியுரமாக, மட்கிய தொழு உரம் ஏக்கருக்கு, 5 டன், மட்கிய தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு உரம், 2 டன் இடுவதால் மண்ணின் அங்ககத்தன்மை நிலை நிறுத்தப்-பட்டு அதிக விளைச்சலை பெறலாம். குறுவை நெல் ரகங்களுக்கு

ஏக்கருக்கு, 48 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து,

16 கிலோ சாம்பல் சத்து

பரிந்துரைக்கப்படுகிறது.

நுண்ணுாட்ட உரம்: இரும்புச்சத்து, துத்தநாக சத்து குறைபாடு உள்ள நிலங்களில் இரும்பு சல்பேட் உரத்தை ஏக்கருக்கு, 20 கிலோவும், ஜிங்க் சல்பேட் ஏக்கருக்கு, 10 கிலோ விதைப்பின்-போது இடவேண்டும். அல்லது வேளாண் துறையின் நுண்-ணுாட்ட உரக்கலவையை ஏக்கருக்கு, 5 கிலோ, 20 கிலோ மண-லுடன் கலந்து பயிர் நடுவதற்கு முன் இட வேண்டும்.

உயிர் உரங்கள்: ஒரு ஏக்கருக்கு, 4 பாக்கெட்(200 கிராம்) அசோஸ்-பைரில்லம், 4 பாக்கெட் பாஸ்போ பேக்டீரியா ஆகியவற்றுடன், 10 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து வயலில் இட வேண்டும். நெற்பயிருக்கு மேலுரமிடுவதில் மிகுந்த கவனம் தேவை. நெல் வளர்ச்சி பருவங்களான துார்-கட்டும் பருவம், தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் தரு-ணத்தில் பயிருக்கு சத்துகளின் தேவை அதிகரிக்கும்.

இலைவழி உரமிடல்: இலைவழி உரமாக யுரியா, 1 சதவீதம், டி.ஏ.பி., 2 சதவீதம், பொட்டாசியம் குளோரைடு, 1 சதவீத கரைசலை, குருத்து உருவான தருணத்தில் ஒரு முறையும், 10 நாட்கள் கழித்து ஒரு முறையும் தெளித்தல் வேண்டும். உயிர் உரங்கள், ஜிங்க் சல்பேட் உள்ளிட்டவை அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் மானியத்தில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us