தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை

ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை

ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை


ADDED : அக் 07, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் மாநகரில் அரசியல் கட்சியினர், சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு பிரிவு, 41ல் தமிழ்நாடு காவல்துறை சட்டம், 1888ன் படி சேலம் மாநகர காவல் கமிஷனர் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். மேலும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த இருக்கும் தேதியில் இருந்து, 5 தினங்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் மற்றும் மத நிகழ்ச்சி போன்றவற்றிக்கு இது பொருந்தாது. இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் வரும், 21 நள்ளிரவு வரை உத்தரவு அமலில் இருக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us