ADDED : மே 18, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாழை பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் பலத்த காற்று வீசியது.
அதற்கு தாக்கு பிடிக்காமல், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், வைத்தியகவுண்டன்புதுார், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், தாருடன் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் அடியோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர்.