ADDED : மே 06, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
சேலம்; ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில், மாநில அளவில் பேண்ட் வாத்திய இசை பயிற்சி, கடந்த, 27ல், சேலம், மரவனேரி மாதவம் மண்டபத்தில் தொடங்கியது.
இதில், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு முன், பேண்ட் வாத்தியம் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிப்போருக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில் பயிற்சி பெற்ற தொண்டர்கள், கருவிகளை வாசித்து காட்டினர். ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி சங்கர்ஜி சிறப்பு அழைப்பாளராக பேசினார். திரளானோர் பங்கேற்றனர்.
