ADDED : மே 12, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் கோட்டை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை முன், ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், சேலம் மண்டல துணை பொதுச் செயலாளர் சதீஷ்குமார் தலைமையில், 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வங்கிகளில் போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டும். நிரந்-தர பணிகளை அவுட் சோர்சிங் முறையில் நியமிப்பதை கைவிட வேண்டும். ஓய்வூதிய தாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க சேலம் உதவி பொதுச்செயலாளர் விக்னேஷ் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
