அடிப்படை வசதிகளை செய்யவில்லை: தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
அடிப்படை வசதிகளை செய்யவில்லை: தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
ADDED : செப் 11, 2024 06:59 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி லோகாம்பாள் தலைமை வகித்தார். அதில், 25 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அதில் தி.மு.க., கவுன்சிலர்களான, 5வது வார்டு காளியம்மாள், 10வது வார்டு வகிதாபானு, 12வது வார்டு அமுதா, 15வது வார்டு அருண் ஆகியோர், கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஆனால் செயல் அலுவலர் ஜனார்த்தனனிடம், 'எங்கள் வார்டு கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும்' என, மனு அளித்-தனர்.இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறுகையில், 'எங்கள் வார்டில் சாக்-கடை, சாலை, குடிநீர் போன்ற எந்த அடிப்படை வேலைகளும் செய்யவில்லை. அதனால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை' என்-றனர். இதுகுறித்து தலைவி லோகாம்பாள் கூறுகையில், ''புறக்கணிப்பு செய்த கவுன்சிலர்கள், அடிப்படை வசதிகள் குறித்து மனு வழங்க-வில்லை. பொது நிதி இல்லை. நிதி பெறப்பட்டதும் பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
