ADDED : மார் 31, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு, ஏற்காட்டிற்கு, சென்னையை சேர்ந்த ஷாகுல் ஹமீத் என்பவர், தனது மனைவி மற்றும் மகனுடன் நேற்று ஏற்காடுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நேற்று காலை, 11:30 மணிக்கு கரடியூர் வியூ பாயின்டுக்கு சென்றனர்.
அப்போது அங்கு திடீரென கூட்டமாக வந்த தேனீக்கள், ஷாகுல் ஹமீத் குடும்பத்தினர் மற்றும் அங்கு இருந்த மேலும் 2 பேர் என 5 பேரை கொட்டியது. அப்போது அங்கிருந்த வனத்துறையினர், காயமடைந்த 5 பேரையும் மீட்டு நாகலுார் ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி அளித்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
