/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் முதலிடம்'
/
'கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் முதலிடம்'
'கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் முதலிடம்'
'கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் முதலிடம்'
ADDED : நவ 07, 2024 05:53 AM
பெத்தநாயக்கன்பாளையம்: ''கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் முதலிடத்தில் உள்ளது,'' என, அமைச்சர் ராஜேந்திரன் பேசினார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. அதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மூன்றரை ஆண்டுகளில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், 220 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள, 20 ஒன்றியங்களில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில், அதிகளவில் பயனாளிகளை கொண்ட முதன்மை ஒன்றியமாக பெத்தநாயக்கன்பாளையம் உள்ளது. மக்கள் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு, நத்தம் பட்டா மாறுதல், வேளாண், தோட்டக்கலை உள்பட, 73 பயனாளிகளுக்கு, 59.64 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம், ஆர்.டி.ஓ., அபிநயா(பொ) உள்பட பலர் பங்கேற்றனர்.