UPDATED : நவ 05, 2026 10:14 PM
ADDED : நவ 04, 2026 11:56 PM
சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில் பாடல்கள் பாடுவதில் ஏற்பட்ட தகராறில், தாட்சாயிணி, 45, அவரது, 13 வயது மகள் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.
சேலம், சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் ரமணிகாந்தன், போலீசில் அளித்த புகார் மனு:
சுகவனேஸ்வரர் கோவிலில், நவ., 2ல் பல்லக்கில் சுவாமி வந்தபோது, தரிசன வசதிக்கு தடுப்பு கயிறு கட்டப்பட்டிருந்தது. அம்மாபேட்டையை சேர்ந்த தாட்சாயிணி, அவரது மகள் கத்தியால், கயிற்றை அறுத்து உள்ளே வந்தனர்.
தட்டி கேட்ட பக்தர்களை, கத்தியை காட்டி மிரட்டினர். அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தாட்சாயிணி, அவரது மகள் மீது, நேற்று முன்தினம் போலீசார், வழக்கு பதிந்தனர்.
போலீசார் கூறுகையில், 'சம்பவத்தன்று, இரவு, 8:30 மணிக்கு, சிவனடியார்களுக்கும், தாட்சாயிணி தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது' என்றனர்.
