/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சைக்கிள் போட்டி;150 பேர் பங்கேற்பு
/
சைக்கிள் போட்டி;150 பேர் பங்கேற்பு
ADDED : செப் 28, 2025 02:15 AM
சேலம்:சேலம் காந்தி மைதானத்தில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு அண்ணாதுரை சைக்கிள் போட்டி, நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ரவிக்குமார் தொடங்கி வைத்தார். 150 பேர் பங்கேற்றனர். 17 முதல், 25 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 8 கி.மீ., மாணவியருக்கு, 5 கி.மீ., 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு, 10 கி.மீ., மாணவியருக்கு, 5 கி.மீ., என, போட்டிகள் நடத்தப்பட்டன.
காந்தி மைதானத்தில் தொடங்கி கலெக்டர் பங்களா வரை சென்று திரும்பினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக, 5,000, இரண்டாம் பரிசு, 3,000, மூன்றாம் பரிசு, 2,000, நான்கு முதல், 10 இடங்களை பெற்றவர்களுக்கு தலா, 1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. ஆர்.டி.ஓ., அபிநயா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.