நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை, பிட் இந்தியா இயக்கம், இந்தியா விளையாட்டு ஆணையரகம் ஆகியவை இணைந்து, ஏற்காடு அடிவாரத்தில் மிதிவண்டி மாரத்தான் போட்-டியை நேற்று நடத்தின. ஜி.எஸ்.டி., சேலம் கமிஷனர் சித்தலிங்-கப்பா தேவி தொடங்கி வைத்தார்.
முக்கிய சாலை வழியே சென்ற மாரத்தான், சேலம், அணைமேடு, ஜி.எஸ்.டி. பவனில் முடிந்தது. போட்டியில் பங்கேற்றோருக்கு டி - சர்ட், பழங்கள் வழங்கப்பட்டன. இதில் கூடுதல் கமிஷனர் நரேஷ், இணை கமிஷனர் ஜெயசன் பிவின் குமார், உதவி கமிஷ-னர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், விளை-யாட்டு ஆணையரக அதிகாரி விட்டல் குமார் உள்பட பலர் பங்-கேற்றனர். ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு, 9ம் ஆண்டு தொடக்கம், வரி வருவாய் வளர்ச்சி குறித்து, மிதிவண்டி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.