ADDED : ஆக 19, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், கே.எம்.நகரை சேர்ந்தவர் சுரேந்தர், 29. கடந்த, 9ல் 'ஆக்டிவா' மொபட்டில், அம்மாபேட்டை பலபட்-டரை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்-கையை பார்க்க வந்தார்.
அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, மொபட்டை நிறுத்திச்சென்றார். திரும்பிவந்த-போது மொபட்டை காணவில்லை.
அதேபோல் அம்மாபேட்டை கோவிந்த கவுண்டர் காட்டை சேர்ந்த மணிகண்டன், 21, 'சைன்' பைக்கும் திருடுபோனது. இதுகுறித்து இருவரும் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அம்மா-பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.கன்னங்குறிச்சி, மடத்துக்காட்டை சேர்ந்தவர் ஜெயசீலன், 23. இவர் கடந்த, 15 இரவு வீடு முன், 'அப்பாச்சி' பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பைக்கை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.