தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/இருதரப்பு தகராறு 2 பேர் கைது

இருதரப்பு தகராறு 2 பேர் கைது

இருதரப்பு தகராறு 2 பேர் கைது


ADDED : நவ 11, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி,:கெங்கவல்லி, இந்திரா காலனியை சேர்ந்த நாவன் மனைவி கவிதா, 35. அதே பகுதியை சேர்ந்த, அஜித்குமார் மனைவி ஜெயமணி, 29. இவர்கள் இடையே, இரு ஆண்டுக்கு முன் ஏலச்சீட்டு எடுத்து பணம் கட்டுவதில் பிரச்னை எழுந்தது.

நேற்று காலை, 10:00 மணிக்கு, அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜெயமணி குடும்பத்தினர், கவிதா, அவரது தாய் பிச்சாயி, தம்பி சக்தி, அவரது மனைவி திவ்யா உள்ளிட்டோரை, உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கவிதா புகாரில் ஜெயமணி, 29, கணவர் அஜித்குமார், 29, மாமனார் ஆறுமுகம், 47, மாமியார் மயில், 43, மீது, கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிந்தனர். ஜெயமணி புகாரில் கவிதாவின் கணவர் நாவன், தம்பி சக்தி, உறவினர்களான, சென்னை, சோழிங்கநல்லுார் சிவா, அம்சவள்ளி மீது வழக்குப்பதிந்தனர். இதில் நாவன், 40, சக்தி, 29, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us