/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பலியான மாணவரின் பெற்றோருக்கு பா.ஜ., ஆறுதல்
/
பலியான மாணவரின் பெற்றோருக்கு பா.ஜ., ஆறுதல்
ADDED : செப் 30, 2025 02:27 AM
மேட்டூர், கரூரில், த.வெ.க., பிரசாரத்தின் போது உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு, பா.ஜ., நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர்.
மேட்டூர், புதுச்சாம்பள்ளியை சேர்ந்தவர் திருமூர்த்தி. கரூரில் ரயில்வே துறையில் கேங் மேஸ்திரியாக வேலை செய்கிறார். அங்கேயே குடும்பத்துடன் வசிக்கிறார். அவரது ஒரே மகன் ஸ்ரீநாத், 16, கடந்த, 27 இரவு கரூரில் நடந்த த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளிக்கு, நேற்று முன்தினம் மாலை கொண்டு வரப்பட்டு உறவினர், கட்சி நிர்வாகிகள் அஞ்சலிக்கு பின் மாலை, 6:00 மணிக்கு புதுச்சாம்பள்ளி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
நேற்று பா.ஜ., சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன், மகளிர் அணி தலைவர் தனம், பொது செயலாளர் மகேஸ்வரி, வீரக்கல்புதுார், பி.என்.பட்டி டவுன்பஞ்., பா.ஜ., தலைவர்கள் ரவி, தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், மகனை இழந்த திருமூர்த்தி வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.