ADDED : நவ 26, 2026 01:52 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றாததை கண்டித்து, ஆத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், பா.ஜ., வக்கீல் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மோகன்குமார் தலைமை வகித்தார்.
சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் பேசுகையில், ''உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதும் தீபம் ஏற்றாமல், நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அவமதித்துள்ளது. த.வெ.க., அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது,'' என்றார்.தொடர்ந்து தமிழக முதல்வர் விஜயை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலர் முத்துகுமார், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
