/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவிலுக்கு விடப்பட்ட மாடுகள் இறைச்சிக்கு விற்பதாக பா.ஜ., பகீர்
/
கோவிலுக்கு விடப்பட்ட மாடுகள் இறைச்சிக்கு விற்பதாக பா.ஜ., பகீர்
கோவிலுக்கு விடப்பட்ட மாடுகள் இறைச்சிக்கு விற்பதாக பா.ஜ., பகீர்
கோவிலுக்கு விடப்பட்ட மாடுகள் இறைச்சிக்கு விற்பதாக பா.ஜ., பகீர்
ADDED : நவ 02, 2025 01:21 AM
சேலம், கோவிலுக்கு விடப்படும் மாடுகளை, இறைச்சி கடைகளுக்கு விற்பதாக, பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ.,வின், சேலம் மாவட்ட ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு தலைவர் சென்னகேசவன், நேற்று, சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் அமுத
சுரபி மற்றும் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு:
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்களால் நேர்த்திக்கடனாக விடப்படும் மாடுகளை, இறைச்சி கடைகளுக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள், தானமாக வழங்கும் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்க, கோசாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.