/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாட்டுவெடி வைத்தபடி விநாயகர் சிலை ஊர்வலம் டி.எஸ்.பி., தடுத்ததால் பா.ஜ.,வினர் வாக்குவாதம்

ADDED : ஆக 31, 2025 07:29 AM
ஆத்துார்:நாட்டுவெடி வைத்தபடி விநாயகர் சிலையை, பா.ஜ.,வினர் ஊர்-வலமாக எடுத்துச்சென்றதால், டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் தடுத்தனர். இதனால், பா.ஜ.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சதுர்த்தியை ஒட்டி, சேலம் மாவட்டம் ஆத்துார், விநாயக
புரத்தில் வைக்கப்பட்ட, 5 விநாயகர் சிலைகளை, நேற்று மதியம், 3:30 மணிக்கு, ஆத்துார் நகர, பா.ஜ.,வினர், மினி சரக்கு வேன்-களில் வைத்து, முட்டல் ஏரியில் கரைக்க ஊர்வலமாக சென்றனர். ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தபோது, நாட்டு வெடி உள்-ளிட்ட பட்டாசுகளை வெடித்தனர்.
இதனால் ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் ஆத்துார் டவுன் போலீசார், ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, 'ஊர்வலம் தொடர்பாக அனுமதி பெறாத நிலையில், பொது இடங்களில் நாட்டு வெடி வைத்து செல்லக்கூடாது'
என்றனர்.
அதற்கு பா.ஜ.,வினர், 'சிலையை மகிழ்ச்சியுடன் எடுத்துச்செல்-வதை தடுக்க வேண்டாம். அனுமதி மறுத்தால் சிலையை திரும்ப எடுத்துச்செல்வோம்' எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். பின் போலீசார், 'பட்டாசு வெடிக்காமல் சிலையை அமைதியாக எடுத்-துச்சென்று, பாதுகாப்பாக கரைக்க வேண்டும்' என அறிவுறுத்-தினர். இதையடுத்து, பா.ஜ.,வினர் ஊர்வலத்தை தொடர்ந்தனர்.