/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பா.ஜ., மாநில தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்
/
பா.ஜ., மாநில தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : அக் 17, 2025 01:48 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், கட்சி அலுவலகத்தில், பா.ஜ., கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிறந்த நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்தார். இதில், கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. காவேரிப்பட்டணம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம், கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் ரவுண்டானா அருகில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பின், ஊத்தங்கரை கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரன், முருகேசன், சுமதி, பொருளாளர் ராணா, செயலாளர்கள் பிரேமானந்த், சரவணன், துணைத்
தலைவர் சுந்தரமூர்த்தி, நகர தலைவர் விமலா உள்பட பலர் பங்கேற்றனர்.