தொழிலாளர்களை ஒடுக்கும் பா.ஜ., தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களை ஒடுக்கும் பா.ஜ., தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 13, 2026 03:57 AM
சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, மெய்யனுார் போக்குவரத்து பணிமனை முன், தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார்.
அதில், 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்தல்; விவசாயி-களின் விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயித்தல்; தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தக்கூ-டாது; தொழிலாளர் நலச்சட்டங்களை, 4 சட்ட தொகுப்புகளாக மாற்றிய, பா.ஜ., அரசை கண்டித்து கோஷம்
எழுப்பினர்.
மேலும் ராஜஸ்தான், உ.பி., ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க, போராட்டங்களில் ஈடுபட்ட அம்மாநில தொழிலாளர்களை ஒடுக்க, வீட்டு சிறையில் அடைத்து, ஆளும் பா.ஜ., அரசு சித்வரை செய்கிறது. அவர்களை விடுவிக்க வலியுறுத்தப்பட்டது. தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., யு.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., உள்-ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர்
பங்கேற்றனர்.
