/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனமரத்துப்பட்டியில் கலைநிகழ்ச்சி முதல்முறை களம் இறங்கும் பா.ஜ.,
/
பனமரத்துப்பட்டியில் கலைநிகழ்ச்சி முதல்முறை களம் இறங்கும் பா.ஜ.,
பனமரத்துப்பட்டியில் கலைநிகழ்ச்சி முதல்முறை களம் இறங்கும் பா.ஜ.,
பனமரத்துப்பட்டியில் கலைநிகழ்ச்சி முதல்முறை களம் இறங்கும் பா.ஜ.,
ADDED : மார் 06, 2024 06:45 AM
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு, மக்களை மகிழ்விக்க, அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில் நாடகம், பாட்டு கச்சேரி, நடன நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை, பல காலமாக நடத்தி வருகின்றனர். இதை காண ஏராளமானோர் கூடுவர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கலைநிகழ்ச்சிக்கு முன் கட்சி நிர்வாகிகள் மேடையில் அமர்ந்து, அவரவர் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறுவர்.
இந்தாண்டு மாரியம்மன் திருவிழா, இன்று தொடங்கி, வரும், 8 வரை நடக்கிறது. வழக்கம்போல், அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில், இரு நாள் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பா.ஜ., முதல்முறையாக, வரும், 9ல், பாட்டு கச்சேரி, பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.
இதுகுறித்து பா.ஜ.,வினர் கூறுகையில், ''இந்தாண்டு முதல்முறை கட்சி சார்பில் மக்களை சிந்திக்க வைக்கும்படி, 'இந்தியாவை வழிநடத்துவது ஆன்மிகமா, அறிவியலா' தலைப்பில் பட்டிமன்றம் நடத்துகிறோம். பாட்டு கச்சேரிக்கும், பட்டிமன்றத்துக்கும் இடையே, மேடையில் மத்திய அரசின் சாதனைகள் குறித்து நிர்வாகிகள் பேசுவர்,'' என்றனர்.

