/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை வசதி கேட்டு நகராட்சி அலுவலகம் எதிரே முற்றுகை
/
சாலை வசதி கேட்டு நகராட்சி அலுவலகம் எதிரே முற்றுகை
ADDED : அக் 17, 2024 02:54 AM
ஆத்துார்: ஆத்துாரில் சாலை வசதி கேட்டு நகராட்சி அலுவலகம் எதிரே, பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்துார் முல்லைவாடி, சக்தி நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள், சாலை, கழிவு நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை மனு அளித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று, 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், ஆத்துார் நகராட்சி அலுவலகம் எதிரே, ராணிப்பேட்டை கடைவீதி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்துார் டவுன் இன்ஸ்பெக்டர் அழகுராணி, நகராட்சி அலுவலர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்ஸ்பெக்டர், பொதுமக்கள் பிரச்னைக்கு, கலெக்டர் வரை மனு அளிக்க வேண்டும். அதன்பின் நடவடிக்கை இல்லை எனில், எங்களிடம் அனுமதி பெற்று தான் சாலைமறியல் போராட்டம் நடத்த வேண்டும். கவர்னர் பாதுகாப்பு பணிக்கு செல்வதால், நீங்கள் செல்லுங்கள். அதிகாரிகளிடம் பேசி சரி செய்யப்படும்' என்றார்.இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.