ADDED : நவ 05, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூத்து குலுங்கும்
ஊமத்தம் பூக்கள்
சேந்தமங்கலம், நவ. 5-
கொல்லிமலையில் பல்வேறு அரிய வகை மூலிகைகள் உள்ளன. இந்த மூலிகை செடிகளின் நடுவே, ஆண்டு தோறும் ஐப்பசி, கார்த்திகை மாதத்தில், மழைக்காலங்களில் ஊமத்தம் செடிகள் அதிகளவில் பூத்து குலுங்குகிறது. இந்த செடிகளில் அதிகளவில் பூக்கள் பூக்கும் பகுதியில், அதிகளவு மழைப்பொழியும் என்பது ஐதீகம். அதன்படி, தற்போது கொல்லிமலையில் ஏராளமான இடங்களில் ஊமத்தம் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. வாசனை இல்லாத வெள்ளை, சிகப்பு நிறம் கலந்த இந்த பூக்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

