/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேட்பாளருடன் வந்த பா.ம.க.,வினர் போலீசுடன் வாக்குவாதம் - தள்ளுமுள்ளு
/
வேட்பாளருடன் வந்த பா.ம.க.,வினர் போலீசுடன் வாக்குவாதம் - தள்ளுமுள்ளு
வேட்பாளருடன் வந்த பா.ம.க.,வினர் போலீசுடன் வாக்குவாதம் - தள்ளுமுள்ளு
வேட்பாளருடன் வந்த பா.ம.க.,வினர் போலீசுடன் வாக்குவாதம் - தள்ளுமுள்ளு
ADDED : மார் 28, 2024 07:15 AM
சேலம் : கலெக்டர் அலுவலகத்தில், பா.ம.க., வேட்பாளருடன் வந்த அக்கட்சியினர் பலரும் உள்ளே நுழைய முயன்றதை, போலீசார் தடுத்தனர். இதனால் வாக்குவாதம் செய்த அக்கட்சியினரால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சேலம் லோக்சபா தொகுதி, பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, பா.ம.க., வேட்பாளர் அண்ணாதுரை, எம்.எல்.ஏ., அருள், மாநகர் பா.ஜ., தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்டோருடன், காலை, 11:04 மணிக்கு காரில் கலெக்டர் அலுவலகம் வந்தார்.முன்னதாக கூட்டணி கட்சியை சேர்ந்த, அ.ம.மு.க., மாநில பொருளாளர் செல்வம், பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் அண்ணாதுரை, பா.ம.க., கதிர்ராசரத்தினம் உள்ளிட்டோர், மற்றொரு காரில் செல்ல, அவர்களை பின் தொடர்ந்து வந்த வேட்பாளர் கார் உள்ளே அனுமதிக்கப்பட்டது.அப்போது கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் திரண்ட பா.ம.க.,- பா.ஜ., உள்ளிட்ட கட்சியினரை, உள்ளே வர விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர். வேட்பாளருடன் செல்ல, 4 பேருக்கு மட்டும் அனுமதி உண்டு என்பதால், மற்றவர்களுக்கு அனுமதியில்லை என கூறிவிட்டனர்.உதவி போலீஸ் கமிஷனர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார், கட்சியினரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, பா.ம.க., மாணவரணி மாநில செயலர் விஜயராசா, வேட்பாளருடன், 8 பேர் மட்டும் சென்றதால் உள்ளே அனுமதிக்கும்படி கோரினார். அதற்கு அனுமதி மறுத்ததால், பா.ம.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின் பா.ம.க.,வினர், 'போலீசார் அராஜகம் ஒழிக' என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் எதிரே, சாலையை ஆர்ப்பரித்து நின்றதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் ஒதுங்கி நின்ற கட்சியினர், வேட்பாளர் அண்ணாதுரை மனுதாக்கல் செய்து திரும்பியதும், அவரை பின் தொடர்ந்து கிளம்பிச்சென்றனர்.

