/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழையால் இடிந்து விழுந்த ரயில் சுரங்கப்பாதை சுவர் போடிநாயக்கன்பட்டி பகுதியினர் அதிர்ச்சி
/
மழையால் இடிந்து விழுந்த ரயில் சுரங்கப்பாதை சுவர் போடிநாயக்கன்பட்டி பகுதியினர் அதிர்ச்சி
மழையால் இடிந்து விழுந்த ரயில் சுரங்கப்பாதை சுவர் போடிநாயக்கன்பட்டி பகுதியினர் அதிர்ச்சி
மழையால் இடிந்து விழுந்த ரயில் சுரங்கப்பாதை சுவர் போடிநாயக்கன்பட்டி பகுதியினர் அதிர்ச்சி
ADDED : அக் 12, 2024 07:37 AM
சேலம்: கட்டி முடித்து, பயன்பாட்டுக்கு வராத ரயில்வே சுரங்கப்பா-தையின் சுவர், மழை காரணமாக நேற்று இடிந்து விழுந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
சேலம் சூரமங்கலம் பகுதியில், போடிநாயக்கன்பட்டி, காட்டூர், அண்ணா நகர், ஆண்டிப்பட்டி, சேலத்தாம்பட்டி உள்ளிட்ட பகுதி-களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் நகர் பகுதிக்கு வருவதற்கு, ரயில்பாதையை கடக்க, போடிநாயக்கன்பட்டி பகுதியில் சிறிய சுரங்கப்பாதை இருந்தது. இதை வாகனங்கள் செல்லும் அளவுக்கு, பெரிய சுரங்கப்பாதை-யாக அமைக்க வேண்டும் என்பது, பல ஆண்டு கோரிக்கையாக இருந்தது. மாநகராட்சியில், 2.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து கடந்த, 2017ல், சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்-டது. அதன் பின் சாலை அமைப்பதற்கு, ரயில்வே துறைக்கும்,
மாநகராட்சிக்கும் இழுபறி நடந்து, இரண்டு ஆண்டுகளில் சாலை அமைக்கப்பட்டது. ஆனாலும், சாலையை மாநகராட்சியிடம்
ஒப்-படைக்க, ரயில்வே நிர்வாகம், 2.40 கோடி குத்தகை பணம் கேட்-டது. இதை மாநகராட்சி வழங்காததால், அந்த ரயில்வே பாலம்
பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டது.மழைக்காலங்களில், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்-பதும், பராமரிப்பின்றியும் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில
நாட்களாக பெய்த மழை காரணமாக, மழைநீர் தேங்கி நின்று, நேற்று காலை சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.
இதனால், தண்டவாளம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால், விபத்து ஏற்படாமல் இருக்க ரயில்வே அதிகாரிக-ளுக்கு தகவல்
அனுப்பப்பட்டது. அப்பகுதியில் செல்லும் ரயில்கள் மாற்றுத்தடத்தில் அனுப்பியதோடு, மணல் மூட்டைகள் அடுக்கி, தற்காலிக
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.சுரங்கப்பாதை தரமில்லாமல் கட்டியுள்ளதால் இடிந்துவிட்டதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.