/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தாக்கியதில் இறக்கவில்லை' தொழிலாளி உடல் ஒப்படைப்பு
/
'தாக்கியதில் இறக்கவில்லை' தொழிலாளி உடல் ஒப்படைப்பு
'தாக்கியதில் இறக்கவில்லை' தொழிலாளி உடல் ஒப்படைப்பு
'தாக்கியதில் இறக்கவில்லை' தொழிலாளி உடல் ஒப்படைப்பு
ADDED : டிச 01, 2024 01:35 AM
'தாக்கியதில் இறக்கவில்லை'
தொழிலாளி உடல் ஒப்படைப்பு
ஆத்துார், டிச. 1-
வாலிபர் தாக்கியதில் தொழிலாளி இறக்கவில்லை என, பிரேத பரிசோதனை மூலம் தெரிந்ததால், அவரது உடலை, உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.
ஆத்துார் அருகே அரசநத்தம் ஊராட்சி, கோவிந்தராஜபாளையத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி முத்துபிரபு, 27. இவர் காட்டுக்கோட்டையை சேர்ந்த, திருமணமான பெண்ணை, திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு தகராறு செய்தார். இதில், அப்பெண்ணின் அக்கா பிரியாவின் கணவரான, வளையமாதேவி மணியரசன், 28, என்பவர், முத்துபிரபுவை தாக்கியுள்ளார்.
அப்போது மயங்கிய முத்துபிரபு, ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது உயிரிழந்தார். இதனால் முத்துபிரபுவை அடித்துக்கொன்றதாக, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நேற்று முன்தினம், பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆத்துார் ஊரக போலீசார், சந்தேக மரண வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று, முத்துபிரபு உடலை மருத்துவ குழுவினர், போலீசார் பாதுகாப்புடன், பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பிரேத பரிசோதனையில், தாக்கியதில் முத்துபிரபு இறக்கவில்லை. இருப்பினும் பிரேத அறிக்கை, அவரது உடல் உறுப்புகள், பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாரடைப்பு அல்லது பூச்சிக்கொல்லி மருந்து குடித்து இறந்தாரா என, பரிசோதனை ஆய்வுக்கு பின் தெரியவரும்' இவ்வாறு கூறினர்.

