ADDED : ஆக 02, 2026 06:25 AM

அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி,
மூக்குத்திப்பாளையம் ஏரியில், ஊராட்சி சார்பில் 2 ஆழ்துளை குழாய்
கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு செல்லும் மின் கேபிள் ஒயரை அடிக்கடி
மர்மநபர்கள் திருடிச்செல்கின்றனர்.
சமீபத்தில் மீண்டும் புதிதாக ஒயர் போடப்பட்டு, குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்தனர். அதையும் மர்மநபர்கள்
துண்டித்து திருடிச்சென்றனர். இதனால் தற்போதைய வறட்சி காலத்தில்
குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஒயர் திருடியவர்
மீது மல்லுார் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள்
வலியுறுத்தினர்.
