ADDED : ஏப் 29, 2026 06:31 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு :ஏற்காடு, அலங்கார ஏரி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று இரவு, 7:45 மணிக்கு ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் பணி நடந்தது. இதை அறிந்து, அங்கு சென்ற ஏற்காடு ஊராட்சி செயலர் ஜெயபால், 'அனுமதி இல்லாமல் ஆழ்துளை குழாய் கிணறு போடக்கூடாது.
அத்துடன் ஏரி அருகே அமைப்பது சட்டப்படி தவறு. உடனே பணியை நிறுத்துங்கள். இல்லை எனில் கிணறு அமைக்கும் வாகனத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதனால் பள்ளி நிர்வாகத்தினனர், அப்பணியை நிறுத்திவிட்டனர்.
