ADDED : மே 23, 2026 04:29 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி; இடைப்பாடி அருகே கேட்டுக் கடையை சேர்ந்த, பள்ளி மாணவி, 15 வயது சிறுமி. இவர் வீட்டு பகு-தியில் நாற்புறமும் சேலைகள் கட்டி குளியல் அறையாக பயன்படுத்தினர். அங்கு நேற்று முன்-தினம் இரவு, 9:00 மணிக்கு சிறுநீர் கழிக்க மாணவி சென்றார்.
அதை பார்த்து, அருகே உள்ள வீட்டில் வசிக்கும், கூலி வேலை செய்யும், 17 வயது சிறுவனும் நுழைந்தான். சிறுமி கூச்சலிட, சிறுவன் தப்பி ஓடினான். தொடர்ந்து சிறுமியின் தாய் வந்து விசாரித்து, கொங்கணாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார், சிறுவனை கைது செய்து, சேலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.
