தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வீட்டில் திருடிய சிறுவன் கைது

வீட்டில் திருடிய சிறுவன் கைது

வீட்டில் திருடிய சிறுவன் கைது


ADDED : ஏப் 07, 2026 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 02:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், மருந்து கடை உரிமையாளர் வீட்டில் திருடிய, சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

சேலம், சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரை சேர்ந்தவர் ஐயப்பன். மருத்துவ பிரதிநிதியாக சென்னையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலையரசி, 37, குரங்குச்சாவடியில் ஆயுர்வேதிக் மருந்து கடை வைத்துள்ளார். கடந்த, 4ல் வீட்டை பூட்டி விட்டு கலையரசி வெளியே சென்றிருந்தார்.

மாலையில் வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்ததுடன், 6 பவுன் நகை, 2,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து கலையரசி கொடுத்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் அப்

பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்த

தில், அதே பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுவன் பூட்டை உடைத்து திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து நகை, பணத்தை மீட்டு, போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us