ADDED : செப் 13, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், அம்மம்பாளையத்தை சேர்ந்த, 12 வயது சிறுவன், 7ம் வகுப்பு படிக்கிறார். நேற்று, அவர் அதே பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, வளர்ப்பு நாய் கடித்தது.
இதில் அந்த சிறுவனுக்கு முகம், கை, கால் ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. பெற்றோர் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.