பழிக்குப்பழியாக கொலை செய்ய அரிவாளுடன் சுற்றிய சிறுவன் கைது
பழிக்குப்பழியாக கொலை செய்ய அரிவாளுடன் சுற்றிய சிறுவன் கைது
ADDED : செப் 21, 2026 01:56 AM
சேலம்: சேலம், வேடுகத்தான்பட்டியை சேர்ந்த சிலர், திருமலைகிரியில் ஒரே பைக்கில் அரிவா-ளுடன் சுற்றித்திரிவதாக, இரும்பாலை போலீசாருக்கு நேற்று முன்-தினம் காலை, 10:00 மணிக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்றபோது, தண்ணீர் தொட்டி அருகே அரிவாளுடன் பைக்கில், 3 பேர் சுற்றியது தெரிந்தது. போலீசாரை பார்த்ததும், 2 பேர் தப்பிவிட்டனர். சுதாரித்த போலீசார், மற்றொருவரை அரிவா-ளுடன் பிடித்தனர். விசாரணையில், 17 வயது சிறுவன் என தெரிந்-தது. அவரை, இரும்பாலை ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வேடுகாத்தான்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 20. இவரை கடந்த ஆண்டு செப்டம்-பரில், திருமலைகிரி கோவிலில் ஏற்பட்ட தகராறில், ஒரு கும்பல் அடித்துக்கொன்றது. அவரது முதலாண்டு நினைவு நாளில், கொலை செய்தவர்களை வெட்டி பழிதீர்க்க, அவரது அண்ணன் நந்தகுமார், நண்பர் ரங்கநாதன் ஆகியோருடன், ஒரு சிறுவனும் அரிவாளுடன் சுற்றியுள்ளார். 3 பேர் மீது வழக்குப்பதிந்த நிலையில் சிறுவனை கைது செய்து, மற்ற இருவரை தேடு-கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
