/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடு மேய்க்க சென்ற சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு
/
ஆடு மேய்க்க சென்ற சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு
ADDED : நவ 11, 2025 01:58 AM
ஓமலுார், ஆடு மேய்க்க சென்ற சிறுவன், ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஓமலுார் அருகே முத்தம்பட்டி, கரட்டூர் பகுதியை சேர்ந்த குமார், 50, கூலித்தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீதர், 18, பிளஸ் 2 முடித்துள்ளார். சற்று திக்கி, திக்கி பேசுபவர்.
நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு ஆடு மேய்க்க சென்று, தொளசம்பட்டி ரயில்வே பாலத்தில் அமர்ந்து கொண்டு கவனித்து வந்துள்ளார். பின், 5:00 மணியளவில் தண்ணீர் குடிக்க, அருகில் உள்ள மானத்தாள் ஏரிக்குள் சென்றவர் நீரில் மூழ்கினார். அன்று இரவு வரை, ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி தேடினர். இருட்டானதால் தேடும் பணியை நிறுத்தினர். நேற்று காலை மீண்டும் துவங்கி, ஸ்ரீதரை சடலமாக மீட்டனர்.

