ADDED : மே 01, 2026 02:15 AM

அ நிறம் | அளவு
சேலம்: சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவில் பிர-மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
முன்-னதாக கொடி மரத்துக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, கருட உருவம் வரைந்த துணிக்கொடி, கொடி கம்பத்துக்கு மஞ்சள், குங்-குமம், சந்தனம் பூசி மாவிலை, மலர்களால் அலங்கரித்து, வேத மந்திரம் முழங்க பட்டாச்சாரியார்களால் பிரமோற்சவ கொடி ஏற்-றப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். தினமும் காலை, மாலையில் பெருமாள் விதவித வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். நேற்று திருச்-சீவிகையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சர்வ அலங்காரத்தில் வரத-ராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
