/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூளைச்சாவு அடைந்த இன்ஜினியர் 3 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்
/
மூளைச்சாவு அடைந்த இன்ஜினியர் 3 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்
மூளைச்சாவு அடைந்த இன்ஜினியர் 3 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்
மூளைச்சாவு அடைந்த இன்ஜினியர் 3 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்
ADDED : நவ 05, 2024 06:36 AM
சேலம்: சேலத்தில், மூளைச்சாவு அடைந்த இன்ஜினியர் உடல் உறுப்பு தானம் செய்தார்.சேலம், நெத்திமேடு பகுதியை சேர்ந்த இன்ஜினியர் மோகன்ராஜ், 31, அவரது தாய் லலிதா, சகோதரர் ஸ்ரீதருடன் வசித்து வந்தார். கடந்த அக்., 29ம் தேதி மாலை, 7:00 மணிய-ளவில் இரு சக்கர வாகனத்தில் சாலையில் சென்றபோது, எதிர்-பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக, கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவம-னைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்-டது. இருந்தபோதும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்-னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் கடந்த, 2ம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்-டது. இதையடுத்து அவரது தாய் லலிதா, சகோதரர் ஸ்ரீதர் ஆகியோர், மோகன்ராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதி-யுடன், அவரது இருதயம் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக பெறப்-பட்டன. சிறுநீரகங்கள் கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனைக்கும், இருதயம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.கே.எம்.சி.ஹெச்., உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு, தகுந்த நேரத்தில் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பி வைத்-தனர்.இது குறித்து, கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில், ''மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து, அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு, அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்-பட்டால், அது பலரது உயிரை காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய மோகன்ராஜ் குடும்பத்திற்கு நன்றி,'' என்றார்.