/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூளைச்சாவு அடைந்த விவசாயி உடல் உறுப்பு 3 பேருக்கு தானம்
/
மூளைச்சாவு அடைந்த விவசாயி உடல் உறுப்பு 3 பேருக்கு தானம்
மூளைச்சாவு அடைந்த விவசாயி உடல் உறுப்பு 3 பேருக்கு தானம்
மூளைச்சாவு அடைந்த விவசாயி உடல் உறுப்பு 3 பேருக்கு தானம்
ADDED : நவ 24, 2024 02:51 AM
சேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தும்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் சம்பத், 34. விவசாயி. இவர் கடந்த, 20ல் இருசக்கர வாகனத்தில் பாலப்-பட்டு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.
அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, குடும்பத்தினர் முன் வந்தனர். இதையடுத்து அவரது இரு கிட்னி, ஒரு கல்லீரல் தானமாக பெறப்பட்டது. ஒரு கிட்னி சேலம் அரசு மருத்துவ கல்-லுாரி மருத்துவமனைக்கும், மற்றொரு கிட்னி கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவை தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.தொடர்ந்து நேற்று, மருத்துவமனை சார்பில் டீன் தேவி மீனாள், இறந்த விவசாயி சம்பத் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு மருத்துவமனை நுழை-வாயில் வரை வந்து சம்பத் உடலை
வழியனுப்பி வைத்தனர்.
உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர் பாலசத்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.