தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 5,240 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்

5,240 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்

5,240 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்


ADDED : பிப் 10, 2026 08:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 08:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, மாநகராட்சியின் கொண்டலாம்பட்டி மண்டலத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

இத்திட்டத்தில், சேலம் மாநகராட்சியில் பணிபுரியும், 3,000 பேர், ஆத்துார், நரசிங்கபுரம், மேட்டூர், இடைப்பாடி, தாரமங்கலம், சங்ககிரி, இடங்கணசாலை நகராட்சிகளில், 1,123 பேர், 30 டவுன் பஞ்சாயத்துகளில், 1,117 பேர் என, 5,240 துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதேபோல் ஆத்துார், நரசிங்கபுரம் நகராட்சிகளில், தி.மு.க.,வை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம், மேட்டூர் நகராட்சியில், பா.ம.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், தாரமங்கலத்தில் நகராட்சி தலைவர் குணசேகரன், உணவு வழங்கி தொடங்கிவைத்தனர்.

ஓமலுார் டவுன் பஞ்சாயத்தில் தலைவி செல்வராணி, காடையாம்பட்டியில் டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் சுலைமான் சேட், பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us