ADDED : ஏப் 27, 2026 01:56 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி: மல்லுார் வழியே தலைவாசல் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்துக்கு காவிரி குடிநீர் செல்கிறது. நேற்று முன்தினம், சேலம் - நாமக்கல் சாலை மற்றும் வீரபாண்டி சாலை ஆகியவை சந்திக்கும் இடத்தில் தார்ச்சாலைக்கு அடியில் உள்ள குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வருகிறது.
இதில் சேலம் சாலை சேதமாகி வருகிறது. கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், காவிரி குடிநீர் வீணாவதால், குழாய் உடைப்பை சரி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
