/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாலிபரிடம் பணம் பறித்த சகோதரர்கள் கைது
/
வாலிபரிடம் பணம் பறித்த சகோதரர்கள் கைது
ADDED : மார் 05, 2024 02:09 AM
சேலம்:சேலத்தில், வாலிபரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த தர்மலிங்கம் மகன் ஜீவா, 22. தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு கிச்சிப்பாளையம், குறிஞ்சிநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே நடந்து சென்றார். அங்கு ேஹாண்டா கிராசியா பைக்கில் வந்த, பச்சப்பட்டியை சேர்ந்த சந்தோஷ்குமார், 27, அவரது தம்பி சதீஷ்குமார், 25, ஆகியோர் ஜீவாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாயை பறித்துக் கொண்டனர்.
இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ்குமார், சதீஷ்குமாரை கைது செய்து அவர்களிடமிருந்து பணம், பைக், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

