/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
சேலத்தில் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 07, 2025 02:01 AM
சேலம், சேலம் சீரங்கபாளையம், பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலகம் முன், பி.எஸ்.என்.எல்., அனைத்து ஊழியர் சங்கங்கள் மற்றும் அசோசியேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளன மாநில தலைவர் பாலகுமார் பேசுகையில்,'' தமிழ் மாநில பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் பார்த்திபன், கடந்த 6 மாதங்களாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. அவர் தொழிலாளர் விரோதபோக்கை வெளிப்படுத்தி வருகிறார். ஊழியர் மற்றும் அதிகாரிகளின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண, தலைமை பொது மேலாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்,'' என்றார்.
அதன்பின், கோரிக்கையை நிறைவேற்ற கோஷமிட்டனர். இதர சங்க நிர்வாகிகள் சிவச்சந்திரன், சண்முக சுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, இசையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.