ADDED : ஏப் 09, 2026 03:27 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே வேங்காம்பட்டி பூவாயம்மன் கோவில் திருவி-ழாவை முன்னிட்டு எருதாட்டம் நேற்று நடந்தது. 40க்கும் மேற்-பட்ட காளை மாடுகள் அழைத்து வரப்பட்டன. இருபுறமும் கயிறு கட்டியபடி, கோவில் திடலுக்கு கொண்டு வரப்பட்ட காளை மாடுகள் முன், பொம்மைகளை காட்டி கோபத்தை துாண்-டினர்.
ஆவேசத்தில் சீறிப்பாய்ந்த காளை மாடுகளை கட்டுப்படுத்த முடி-யாமல், மாடு பிடி வீரர்கள் சிதறி ஓடினர். பல மாடுகள் தடுப்புகளை தாண்டி, பார்வையாளர் பக்கம் பாய்ந்தது. எருதாட்டத்தை சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டுகளித்தனர்.
