/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொங்கல் பண்டிகையில் களைகட்டிய எருதாட்டம்
/
பொங்கல் பண்டிகையில் களைகட்டிய எருதாட்டம்
ADDED : ஜன 16, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: பொங்கல் பண்டிகையை ஒட்டி, சேலம் மாவட்டம் இடைப்பாடியில் உள்ள கவுண்டம்பட்டியில், எருதாட்டம் நேற்று நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து, 12 காளைகள் வரவழைக்கப்பட்டு எருதாட்டம் நடந்தது.
மக்கள், மாடுகளை பிடித்த படி, சின்னமாரியம்மன் கோவிலை சுற்றி வந்தனர். சிலர் பொம்மைகளை காட்டி காளைகளை கோபமூட்டினர். அப்போது துள்ளிக்குதித்த காளைகளை பார்த்து, கூடி நின்று வேடிக்கை பார்த்த மக்கள் ஆரவாரம் செய்தனர். அதன் அருகே உள்ள பகுதிகளிலும் எருதாட்டம் களைகட்டியது.