நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே வணிச்சம்பட்டி காளியம்மன் கோவில் மைதானத்தில் எருதாட்டம் நேற்று நடந்தது. முன்னதாக அம்ம-னுக்கு பொங்கல் வைத்து, மாடுகளுக்கு பொட்டு வைத்து பூஜை செய்தனர்.
தொடர்ந்து இளைஞர்கள் மாடுகளை பிடித்து கோவிலை சுற்றி வந்தனர். அப்போது பொம்மைகளை காட்டி, காளைகளுக்கு கோபமூட்டினர்.
பொம்மைகளை துாக்கி வீசிய காளைகளை கண்டு, பார்வையா-ளர்கள் ஆரவாரம் எழுப்பினர். 30க்கும் மேற்பட்ட காளைகளை இளைஞர்கள் பிடித்தபடி ஓடி உற்சாகம் அடைந்தனர். தாரமங்-கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் லட்சுமாயூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த எருதாட்-டத்தில், 10க்கும் மேற்பட்ட காளைகளை, இளைஞர்கள் பிடித்து கோவிலை சுற்றி வந்தனர்.

