/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜல்லிக்கட்டில் சீறிய காளைகள்; மல்லுக்கட்டிய காளையர்கள்
/
ஜல்லிக்கட்டில் சீறிய காளைகள்; மல்லுக்கட்டிய காளையர்கள்
ஜல்லிக்கட்டில் சீறிய காளைகள்; மல்லுக்கட்டிய காளையர்கள்
ஜல்லிக்கட்டில் சீறிய காளைகள்; மல்லுக்கட்டிய காளையர்கள்
ADDED : பிப் 28, 2025 07:00 AM
வாழப்பாடி: பழனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன், வீரர்கள் மல்லுக்கட்டினர்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பழனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை, 8:00 மணிக்கு, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, 270 காளைகளை, கால்நடை மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதித்தனர். 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிட்டனர். சில காளைகள் சீறிப்பாய்ந்து தொடவிடாமல், 'ஆட்டம்' காட்டின. இதனால் வீரர்கள், பாதுகாப்பு கட்டைகள் மீது ஏறி தஞ்சம் அடைந்தனர்.
மேலும் சில காளைகளை மல்லுக்கட்டி, வீரர்கள் அடக்கினர். பிடிபடாத காளை உரிமையாளர், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு, பைக், சைக்கிள், பீரோ, மிக்ஸி, கிரைண்டர், டேபிள், பணம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. கருமந்துறை போலீஸ்காரர் முத்தமிழ், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் என, 31 பேர் லேசான காயம் அடைந்தனர். இந்நிலையில், விழா குழுவினருக்கு, வீரர்கள், மாடுபிடி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்காததால், மதியம், 2:30 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.