நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், சூரமங்கலம் திருவாக்கவுண்டனுார் ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் பிரகாஷ், 45. இவர் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் காற்று பிடிக்கும் பணி செய்து வந்தார். இந்-நிலையில் நேற்று காலை, 7:30 மணிக்கு 3 ரோடு வழியாக பெட்ரோல் பங்க்கிற்கு நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக, சேலத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. நிலைதடுமாறி கீழே விழுந்த போது, பஸ் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு,
சேலம் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பள்ளப்-பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

