/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ் ஏறுவதில் தகராறு: 20 பேர் மீது வழக்கு
/
பஸ் ஏறுவதில் தகராறு: 20 பேர் மீது வழக்கு
ADDED : அக் 25, 2025 01:04 AM
தலைவாசல், தலைவாசல், சிறுவாச்சூரை சேர்ந்தவர் சக்திவேல், 46. இவர் நேற்று முன்தினம், ஊனத்துாரில் இருந்து ஆத்துார் சென்ற தனியார் பஸ்சில், முன்புறம் ஏற முயன்றார். அப்போது படியில் நின்றிருந்த, தனியார் பள்ளி பஸ் டிரைவரான, ஊனத்துாரை சேர்ந்த ஐயப்பன், 30, பின்புறம் ஏறும்படி, சக்திவேலை அறிவுறுத்தினார். அதில் அவர்கள் இடையே பஸ்சுக்குள் தகராறு ஏற்பட்டது.
பின் ஊனத்துார் சென்ற சக்திவேல், ஐயப்பன் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதில் இரு தரப்பினர் தகராறாக மாறியது. இதில் ஐயப்பன் குடும்பத்தினர், 4 பேர், சக்திவேல் உள்பட இருவர் என, 6 பேர் ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரு தரப்பினரும் புகார் அளிக்க, தலா, 10 பேர் வீதம், 20 பேர் மீது, பெண் வன்கொடுமை உள்பட, 4 பிரிவுகளில், தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

