/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவர்கள் போராட்டம் எதிரொலி பஸ் இயக்கப்படும் நேரம் மாற்றம்
/
மாணவர்கள் போராட்டம் எதிரொலி பஸ் இயக்கப்படும் நேரம் மாற்றம்
மாணவர்கள் போராட்டம் எதிரொலி பஸ் இயக்கப்படும் நேரம் மாற்றம்
மாணவர்கள் போராட்டம் எதிரொலி பஸ் இயக்கப்படும் நேரம் மாற்றம்
ADDED : அக் 16, 2025 01:48 AM
கெங்கவல்லி, மாணவர்கள் போராட்டத்தால், நல்லமாத்தியில் இருந்து, பஸ் இயக்கும் நேரம் மாற்றப்பட்டதோடு, புது தடத்திலும் பஸ் இயக்கப்பட உள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கெங்கவல்லி அருகே கூடமலை அரசு மேல்நிலைப்பள்ளியில், நல்ல மாத்தி, நினங்கரை, 95.பேளூர், நரிப்பாடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் இருந்து ஏராளமானோர் படிக்கின்றனர். அந்த கிராமங்களில் இருந்து, கூடமலைக்கு வரும் அரசு பஸ், காலை, 7:00 மணிக்கு இயக்கப்படுவதால், மாணவ, மாணவியர் சிரமப்பட்டனர். அதேபோல், மாலை, 5:30 மணி வரை, சிறப்பு வகுப்புகள் உள்ள நிலையில், 5:00 மணிக்கே கூடமலையில் இருந்து, அரசு பஸ் இயக்கப்படுகிறது.
அதனால் பள்ளி நேரத்தில் பஸ் இயக்கக்கோரி, கடந்த, 8ல், கூடமலை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே, மாணவ, மாணவியர், பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக, நல்லமாத்தியில் இருந்து, காலை, 7:25க்கு புறப்பட்டு, 8:00 மணிக்கு, கூட
மலைக்கு வரும்படி, பஸ் இயக்க நேரத்தை, போக்குவரத்துத்துறையினர் மாற்றியுள்ளனர். மேலும் தம்மம்பட்டி கிளை பணிமனையில் இருந்து, நல்லமாத்தி - கூடமலைக்கு, புது தடத்தில் பஸ் இயக்குவது தொடர்பாக, போக்குவரத்து உயர் அதிகாரிகளுக்கு தபால் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு வந்த பின், புது தடத்தில் பஸ் இயக்கப்படும் என, போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்கள், அவர்களது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.