/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலதிபர் வீட்டில் கைவரிசை முகமூடி கும்பல் சுற்றிவளைப்பு
/
தொழிலதிபர் வீட்டில் கைவரிசை முகமூடி கும்பல் சுற்றிவளைப்பு
தொழிலதிபர் வீட்டில் கைவரிசை முகமூடி கும்பல் சுற்றிவளைப்பு
தொழிலதிபர் வீட்டில் கைவரிசை முகமூடி கும்பல் சுற்றிவளைப்பு
ADDED : நவ 17, 2025 04:40 AM
சேலம்: தொழிலதிபர் வீட்டில் முகமூடி அணிந்து வந்து கைவரிசை காட்டிய, ௫ பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், அம்மாபேட்டை அடுத்த மாசிநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன், 63. பி.டெக்., படித்த இவர், வீடுகள் கட்டி விற்கிறார். இவரது மனைவி பூங்கொடி. கடந்த, 12 இரவு, தம்பதி வீட்டுக்குள் துாங்கிக்கொண்டிருந்தனர். நள்ளி-ரவில், வீடு புகுந்த முகமூடி அணிந்த கும்பல், தம்பதியிடம் கத்-தியை காட்டி மிரட்டி, பூங்கொடி அணிந்திருந்த சங்கிலியை பறித்து தப்பினர். சந்திரசேகரன் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்து, சேலம், கோரிமேடு, மாரியம்மன் கோவில், 2வது தெருவை சேர்ந்த தீனா, 25, சின்ன திருப்பதி, அண்ணா சாலை அய்யனார், 19, ரகுவரன், 30, வாழப்பாடி, கோலாத்துக்கோம்பை வசந்த-குமார், 35, மணிகண்டன், 51, ஆகியோரை நேற்று கைது செய்-தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கைதான, 5 பேரும், சந்திரசேகரனுடன், ஒரு அமைப்பில் உறுப்-பினர்களாக இருந்தவர்கள். பல்வேறு புகாரால், அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட, 5 பேரும், சந்திரசேகரனிடம், நிறைய பணம் இருக்கும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டனர். ஆனால் பெரிய அளவில் சிக்காததால், அவரது மனைவி அணிந்திருந்த சங்கி-லியை பறித்துச்சென்றனர். அதுவும் கவரிங் நகை. அதில் கோர்த்தி-ருந்த தாலி, குண்டுமணி மட்டும் தங்கம். அதன் மதிப்பு, ஒரு பவுன் இருக்கும். அதை மீட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

