ADDED : ஜூலை 04, 2026 04:15 AM
சேலம்; சேலம் மாவட்டத்தில், துணை மருத்துவ படிப்புக-ளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்-ளது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் இளம் பகவத் அறிக்கை: மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்வி நிறு-வனங்களில், நடப்பு கல்வி ஆண்டில் செவிலியர், மருந்தாளுனர், துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.எஸ்சி., செவிலியர், பி.பார்ம்., மருத்துவ ஆய்-வக தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளுக்கு, மருத்துவக் கல்வி தேர்வு குழுவின் ஆன்லைன் கலந்தாய்வு மூலம், மதிப்பெண் தகுதி, இடஒதுக்-கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும். இதற்கு பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்-நோக்கு மருத்துவமனை பணியாளர் படிப்புக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். தகுதியுடைய-வர்கள், www.tnmedicalselection.org என்ற இணையத-ளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். பட்டப்படிப்புகளுக்கு வரும், 7 மாலை, 5:00 மணி வரை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு வரும், 15 மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்-கலாம். அரசு நிறுவனங்களில் இதற்கான கட்-டணம் மிகக்குறைவு. பொது செவிலியர் மற்றும் தாதியர் பட்டயப்படிப்புக்கு கட்டணம் இல்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி தேவைப்ப-டுவோர், அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள உதவி மையங்களையோ அல்லது 97514 56001 என்ற மாவட்ட உதவி மைய எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.
