/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தனி குறியீடு எண் பெற முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு
/
தனி குறியீடு எண் பெற முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு
தனி குறியீடு எண் பெற முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு
தனி குறியீடு எண் பெற முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : பிப் 16, 2025 02:48 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், 609 வருவாய் கிராமங்களில் வேளாண் அடுக்ககம் திட்டத்தில், அனைத்து ஊராட்சி அலுவலகம், சமு-தாய கூடங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உரு-வாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் நில விபரங்களுடன், விவசாயிகளின் விபரம், மின்னணு பயிர் சாகுபடி விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்-வொரு விவசாயிகளுக்கும் தனித்தனி குறியீடு எண் வழங்கப்படு-கிறது. விவசாயிகள் ஒப்புதல் பெற்று, அவர்களின் தரவு சேகரிக்-கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். அதனால் மாவட்ட விவசாயிகள், அந்தந்த பகுதிகளில் முகாம் நடக்கும் நாட்களில் நில ஆவணங்கள், ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுடன், பதிவு செய்து பயன்-பெறலாம். இனி மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்ட பலன்களும், விவசாயிகளின் தரவு அடிப்படையில் வழங்கப்படு-வதால், அனைத்து துறை பயன்கள், மானியங்களை, ஒற்றைச்
சாளர முறையில் பெறலாம் என, சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் தெரிவித்துள்ளார்.