/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சான்று பெற்ற விதைகள் இருப்பு விவசாயிகளுக்கு அழைப்பு
/
சான்று பெற்ற விதைகள் இருப்பு விவசாயிகளுக்கு அழைப்பு
சான்று பெற்ற விதைகள் இருப்பு விவசாயிகளுக்கு அழைப்பு
சான்று பெற்ற விதைகள் இருப்பு விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 21, 2025 12:49 AM
சேலம், சேலம் வேளாண் உதவி இயக்குனர் அருணா அறிக்கை:
தென் மேற்கு பருவமழை பெய்து வருவதால், சேலம் மாவட்ட விவசாயிகள், ஆடிப்பட்ட நெல் விதைப்புக்கு தயாராகின்றனர். அதனால் தரமான, சான்று பெற்ற விதைகள், மாவட்டத்தின் அனைத்து விரிவாக்க மையங்களில், போதிய அளவு இருப்பு உள்ளது.
சேலம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், ஏ.டீ.டி., 45, 54, கோ 52, 55, டி.கே.எம்., 13 மற்றும் வெள்ளை பொன்னி ஆகிய சான்று பெற்ற நெல் விதைகள் உள்ளன. கிலோ நெல் விதைக்கு, 20 ரூபாய் மானியம் உள்ளது. உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ், டிரைகோடெர்மா விரிடி மற்றும் நெல் நுண்ணுாட்டம் இருப்பு உள்ளது. விவசாயிகள், விதை, வேளாண் இடுபொருட்களை பெற்று பயன் பெறலாம்.